மார்கழி மாதம் வளர்பிறை பதினோராம் நாள் வரும் ஏகாதசி நன்நாளைத்தான் வைகுண்ட ஏகாதசி என முற்காலம் முதல் பின்பற்றப்படுகிறது.
ஸ்ரீமன் நாராயணன் இருப்பிடமான, சொர்கமான ஸ்ரீ வைகுண்டத்தின் வடக்கு வாயில் திறக்கும் நன்நாள்.
ஸ்ரீமன் நாராயணரின் பகைவர்களுக்காக, ஸ்ரீமன் நாராயணரே சொர்க்கத்த்தின் ஸ்ரீ வைகுண்டத்தில் வடக்கு வாயிலை திறந்து வரவேற்றத்தால் பகைவர்கள் தங்கள் நிலை மறந்து தரிசித்த ஸ்ரீ நாராயணரின் தோற்றத்தை விவரித்து ஸ்ரீமன் நாராயணரிடம் தாங்கள் தரிசித்த திருமாலின் தோற்றத்தை பின் வரும் அனைத்து யுகத்திலும் ஜீவராசிகள் அதே வடக்கு வாயிலில் தரிசித்து பகைமைத்துவத்தை போக்கி அவரவரது பிறப்பின் சாதாரணமான நிலையை உணரவேண்டும் என வேண்டியதன் காரணத்தால் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி போற்றப்படுகிறது.
முரண் எனும் அசுரன் தேவர்களையும் கடவுளர்களையும் துன்பப்படுத்தியதால் ஸ்ரீ விஷ்ணு பகவான் அவனுடன் 1000 வருடங்கள் போர் செய்து மிகவும் சோர்வுற்று
ஓய்வெடுக்க எண்ணி ஒரு மலை குகையினுள் படுத்து உறங்கியசமயம்
நடு நிசியில் பகைவன் பகவானை அழிக்க முற்படும்போது பகவானின் உடலில் இருந்து ஒரு உருவம் தோன்றி பகவானை காத்து பகைவனை அழித்ததால் அந்த நாளில் தோன்றிய அந்த உருவத்தை, ஸ்ரீமன் நாராயணன் ஏகாதசி என பெயரிட்டு மகிழ்ந்தார். பகவான் சோர்வுற்று தூங்கிய சமயம் தன்னை காத்ததால் அந்த ஏகாதசி சமயம் விழிப்புடன் இருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் பகவான் சொர்க்கத்தினை அடையும் வழிமுறைகளை அறிய செய்வார் என திடமாக நம்பப்படுகிறது.
ஓம் நமோ நாராயணாய நமஹ.

0 Comments