நாம் செல்லும் பாதையில் அசிங்கங்கள் தென்பட்டால் அதை விட்டு விலகி கடந்து செல்லவேண்டும். அதை மிதித்துக்கொண்டு சென்றால் அந்த அசுத்தம் நம்மையும் சுத்தமற்றதாக்கிவிடும்.
அதேபோலத்தான் நமது வாழ்க்கை பாதையில் நமக்கு தடங்கல்கள் கொடுக்கும் நபர்களை விட்டு விலகி சென்று நமது குறிக்கோள்களை அடையவேண்டும். அவர்களுடன் போராடுவதால் நமது ஒழுக்கத்திற்கு களங்கம் வந்துவிடும்.
நாம் செல்ல ஒரே வழிதான் உள்ளது எனும் சூழ்நிலையில் அந்த வழியில் உள்ள சில தடைகளை சரியான உபகரணங்களுடன் அகற்றி முன்னேற வேண்டும்.
இதேபோல் நம் வாழ்க்கை பாதையில் தொந்தரவுகளுடன் தலையிடும் மக்களுக்கு சரியான மறக்கமுடியாத பாடத்தை சரியான வழிமுறைகளுடன் நாம் கற்பிக்க வேண்டும்.

0 Comments