ஒவ்வொரு உயிருக்கும் ஏழு பிறவிகள் அல்லது நூறு பிறவிகள் என்று கூறப்படுகிறது. நம் உயிர் இந்த உடம்பில் இருக்கும்போதே இந்தப் பிறவிக்குப் புண்ணியங்களைச் செய்தால் மனநிறைவு ஏற்பட்டு அதன் பலன் அடுத்த பிறவிக்கு நன்மை பயக்கும்.
பிறக்கும் போது நாம் எப்படி இருந்தோம் என்பதை அறிய முடியாது. ஆனால் இன்பமோ துன்பமோ அதன் பலனை தற்போது அனுபவித்து வருகிறோம்.
அதுபோல இந்தப் பிறவியில் பல நற்செயல்கள் அடுத்தவரின் நலனிலும் குடும்பம் தாய் தந்தையரின் நலனிலும் அக்கறை செலுத்தினால் அது நமது அடுத்த பிறவியின் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
நம்மைச் சிறப்புறச் செய்தவர்களின் கடனைத் தீர்க்க இயலாது. இந்தப் பிறவியில் அவர்கள் உயிரோடு இருக்கும்போதே அவர்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.
ஒரு உயிர் இந்த உடலை விட்டு வெளியேறியவுடன் அவர்கள் செய்த செயல்களின் விளைவுகளை அதாவது நன்மை தீமைகளை உணர முடியும். பிறகு எல்லாம் மறந்து அடுத்த உடம்புக்குள் நுழையத் தயாராகிறது.
ஒரு பிறவியில் நமக்குக் கிடைக்கும் பெற்றவர்களின் கடனைத் தீர்த்தாலொழிய, ஏழு, நூறு பிறவிகளில் தீர்க்க முடியாது. ஏனென்றால் அந்த ஏழு அல்லது நூறு பிறவிகளில் ஒவ்வொரு தாய்க்கும் தந்தை இருப்பார். அவர்களின் கடன்களும் உயரும்.
எனவே, அந்தந்த பிறவிகளில் நாம் நமது கடமை என்று சொல்லப்படும் கர்மாவைச் சரியாகச் செய்ய வேண்டும். நமக்குப் பின் வரும் எல்லா அவதாரங்களுக்கும் அந்த கர்மா தொடர்கிறது.
0 Comments